நாட்டின் முதல் குடிமகன், வீட்டின் தலைப்பிள்ளை பொறுப்புகளும் கடமைகளும் என்றும் அதிகம் ஆசைகளும் அவஸ்தைகளும் என்றும் அதிகம்
சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம் வயதுக்கே உரிய ஆசைகளால் சிறு சண்டை முதல் பள்ளி கலாட்டா வரை முதல் ஆளாய் நான் குழாயடி ஓரம் நின்று, மாணவிகளை திருட்டுத்தனமாய் ரசித்தது முதல் என்றும் மறக்க முடியாத சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம்...
வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய் என் கல்லூரி வாழ்க்கை ஆசிரியருக்கு அடங்காதவனாய் முதலாமாண்டு ஆழ்ந்த நட்புகளை அடைந்தவனாய் இரண்டாமாண்டு அனைவரின் அன்பையும் அடைந்தவனாய் மூன்றாமாண்டு இப்படியாய் வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய் என் கல்லூரி வாழ்க்கை ....
இரண்டே நாள் கல்லூரி விடுமுறைக்குப்பின் மூன்றாம் நாள் முதலே கணினி தொழிலகம் ஒன்றில் வேலை அவசரகால ஆள் எடுப்போ அல்லது அனுபவம் கற்றுதர ஆசையோ தெரியவில்லை முப்பது நாற்பது நாட்களில் வேறொரு தொழிலகத்தில் நான் அங்கும் ஆறு மாதமே (?)
தாவி வந்தேன் நகரத்திற்கு (நரகத்திற்கு..?) இயந்திரமாய் வாழ்க்கை அனைத்தும் இங்கே செயற்கை ஏற்றுக் கொண்டேதான் ஆக வேண்டுமா இந்த செயற்கையை..?
யோசிக்கையில் நினைவில் வந்தது...
தவிப்பாய் "தாய்" முகம் தலைப்பிள்ளை உள்ளான் என்ற தன்னம்பிக்கையாய் "தந்தை" முகம் ஆசையாய் "தம்பி" முகம் பெருமையாய் "நண்பர்களின்" முகம் சாதித்து திரும்பி வருவான் என்று காத்திருக்கும் "காதலியின்" முகம்