Thursday, October 29, 2009

மீன்...



உறங்காமல் விழித்திருக்கும் கண்கள் உனக்கு
அழகிய கண்களின் உவமை நீ

ஓயாமல் உழைத்திருக்கும் நீ என்னை
சோம்பேறியாக்கி உன் அருகில் நிற்க வைத்தாய்

இமை இல்லா நீ
என் இமையை மறக்கச் செய்தாய்

எங்கள்த் தொட்டிக்குள் உன்னை சிறை வைத்ததால்
உன் வாழ்வும் போராட்டமே

எண்ணச் செய்வது என் மனச் சுதந்திரம்
வேண்டி உனக்கு இந்த சிறை

மனம் வலித்தது உன் நிலை எண்ணி
என் சுயநலம் மாற்றியது

என்னை "துரோகியாக" உன்னை "தியாகியாக"

உன் நிலை எண்ணி சபிக்காதே
உனக்கு இமை தரா ஆண்டவனை!

சபித்து எரித்துவிடு, உன் சுதந்திரம் பறித்து
உன் சிறு அசைவையும் ரசிக்கும் என்னை.

எப்படி இருப்பினும் எனக்கு மன அமைதி தந்தாய்
ஆனால் என்று உன் சாபம் பலித்து விட்டது

உன் சிறை என் மனச் சுதந்திரம் பறித்து
சுமையேற்றி மனம் கலங்க வைத்து மாற்றியது

என்னை தியாகியாக அல்ல
மனம் கலங்கும் நல்ல "மனிதனாக."
-- கவி

1 comment:

  1. //எண்ணச் செய்வது என் மனச் சுதந்திரம்
    வேண்டி உனக்கு இந்த சிறை //
    மனதை சிறை செய்யும் வரிகள் நண்பா

    ReplyDelete