Thursday, November 12, 2009

தமிழ் உசத்திதான்...










தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!

தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?

ஆம்..,

தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?

உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...

Saturday, November 7, 2009

மாற்றம்...






மல்லிகையும் மணக்க மறந்தது
என் சுவாசம் நீ என்று ஆன பின்..

நல்ல கவிதையும் கசந்து போனது
உன் பெயரை வாசித்த பின்..
-கவி

முரண்பாடு ...



காதல் சுகமானது என்று கூறுகிறார்கள்
என்னிடத்தில் மட்டும்
ஏன் இப்படி வலிக்கிறது..!
-கவி

மறந்தேன்...



இமைக்க மறந்தேன்
எதிரில் நீ..

விழிக்க மறந்தேன்
கனவிலும் நீ..!

Wednesday, November 4, 2009

யோசனையின் முடிவில் நானும் இன்று...



நாட்டின் முதல் குடிமகன், வீட்டின் தலைப்பிள்ளை
பொறுப்புகளும் கடமைகளும் என்றும் அதிகம்
ஆசைகளும் அவஸ்தைகளும் என்றும் அதிகம்

சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம்
வயதுக்கே உரிய ஆசைகளால்
சிறு சண்டை முதல் பள்ளி கலாட்டா வரை முதல் ஆளாய் நான்
குழாயடி ஓரம் நின்று, மாணவிகளை திருட்டுத்தனமாய்
ரசித்தது முதல் என்றும் மறக்க முடியாத
சித்திரைக்கால சில் மழையாய் பள்ளிக்காலம்...

வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய்
என் கல்லூரி வாழ்க்கை
ஆசிரியருக்கு அடங்காதவனாய் முதலாமாண்டு
ஆழ்ந்த நட்புகளை அடைந்தவனாய் இரண்டாமாண்டு
அனைவரின் அன்பையும் அடைந்தவனாய் மூன்றாமாண்டு
இப்படியாய் வர்ணிக்க வார்த்தை இல்லாத மாயாஜால வசந்த காலமாய்
என் கல்லூரி வாழ்க்கை ....

இரண்டே நாள் கல்லூரி விடுமுறைக்குப்பின்
மூன்றாம் நாள் முதலே கணினி தொழிலகம்
ஒன்றில் வேலை
அவசரகால ஆள் எடுப்போ அல்லது அனுபவம் கற்றுதர
ஆசையோ தெரியவில்லை
முப்பது நாற்பது நாட்களில் வேறொரு தொழிலகத்தில் நான்
அங்கும் ஆறு மாதமே (?)

தாவி வந்தேன் நகரத்திற்கு (நரகத்திற்கு..?)
இயந்திரமாய் வாழ்க்கை
அனைத்தும் இங்கே செயற்கை
ஏற்றுக் கொண்டேதான் ஆக வேண்டுமா இந்த செயற்கையை..?

யோசிக்கையில் நினைவில் வந்தது...

தவிப்பாய் "தாய்" முகம்
தலைப்பிள்ளை உள்ளான் என்ற தன்னம்பிக்கையாய் "தந்தை" முகம்
ஆசையாய் "தம்பி" முகம்
பெருமையாய் "நண்பர்களின்" முகம்
சாதித்து திரும்பி வருவான் என்று காத்திருக்கும் "காதலியின்" முகம்

யோசனையின் முடிவில் நானும் இன்று...

Monday, November 2, 2009

உனக்குள் மட்டுமே...



உனக்குள்ளும் நான் உண்டு
என்னை நீ நினைத்தால்..!

உனக்குள் மட்டுமே நான் உண்டு
எனக்காய் உன்னை நீ மறந்தால்..!!
--கவி

Thursday, October 29, 2009

மீன்...



உறங்காமல் விழித்திருக்கும் கண்கள் உனக்கு
அழகிய கண்களின் உவமை நீ

ஓயாமல் உழைத்திருக்கும் நீ என்னை
சோம்பேறியாக்கி உன் அருகில் நிற்க வைத்தாய்

இமை இல்லா நீ
என் இமையை மறக்கச் செய்தாய்

எங்கள்த் தொட்டிக்குள் உன்னை சிறை வைத்ததால்
உன் வாழ்வும் போராட்டமே

எண்ணச் செய்வது என் மனச் சுதந்திரம்
வேண்டி உனக்கு இந்த சிறை

மனம் வலித்தது உன் நிலை எண்ணி
என் சுயநலம் மாற்றியது

என்னை "துரோகியாக" உன்னை "தியாகியாக"

உன் நிலை எண்ணி சபிக்காதே
உனக்கு இமை தரா ஆண்டவனை!

சபித்து எரித்துவிடு, உன் சுதந்திரம் பறித்து
உன் சிறு அசைவையும் ரசிக்கும் என்னை.

எப்படி இருப்பினும் எனக்கு மன அமைதி தந்தாய்
ஆனால் என்று உன் சாபம் பலித்து விட்டது

உன் சிறை என் மனச் சுதந்திரம் பறித்து
சுமையேற்றி மனம் கலங்க வைத்து மாற்றியது

என்னை தியாகியாக அல்ல
மனம் கலங்கும் நல்ல "மனிதனாக."
-- கவி

கவிதை...



கவிதை என்பது
வார்த்தைகளின் கூட்டல் அல்ல..
உணர்வுகளின் கூட்டல்...!
--கவி

Wednesday, October 28, 2009

தியாகி...



மனசாட்சியை
தியாகம் செய்து,
தியாகியானான்
அரசியல்வாதி...
--கவி

Tuesday, October 27, 2009

மனிதன் எங்கே..?



மரம் நடுங்கள் சாலையோரம்
சரிதான் செய்கிறோம்,

முதலில் கூறுங்கள் சாலை எங்கே?

காடு காப்போம் காட்டு விலங்கிற்காக
சரிதான் காப்போம்,

முதலில் கூறுங்கள் காடு எங்கே?

மனிதம் வளர்க்க மனிதநேயம் காப்போம்
சரிதான் காப்போம்,

ஐயா..! முதலில் கூறுங்கள் மனிதன் எங்கே..?

--கவி

மறக்காதே.....



உன் பேனாவில்
மையூற்ற மறந்தாலும்,
என் பெயர்
எழுத மறக்காதே.....

--கவி

Monday, October 26, 2009

வறுமை...



மகள் பருவமடைந்தாள்,
தாயும்,
தாவணிக்கு மாறினாள்.
இருந்த ஒரு சேலை
இரண்டாக கிழிப்பட்டது....
--கவி

Friday, October 23, 2009

நட்பாய் மட்டுமே இரு என்றாய்..!



என் சுவாசம்,
உன் கூந்தலின் வாசம் மட்டுமே..!
என் பார்வை,
உன் விழிகளின் வியப்பை மட்டுமே..!
என் செவிகள் உணர்வது,
உன் இதழ்களின் அசைவுகளை மட்டுமே..!
என் உறக்கம்,
உன் உள்ளங்கையில் மட்டுமே..!
நான் உறவாடுவது,
உன் மனதோடு மட்டுமே..!
இவையெல்லாம் நம் நட்பில் கிடைக்குமென்றால்,
உடனே கூறு...
துறந்து விடுகிறேன் இப்பொழுதே
என் காதலை.....!

Wednesday, October 21, 2009

என்ன ஒரு பொருத்தம்..!



என்னவள் என்னிடம் நீட்டினாள்,
அவளின் திருமண அழைப்பிதழ்...

அத்தினத்தை எண்ணி,
என் சிந்தையில்...

நாளை என்னவளுக்கு "திருமணம்"
இன்று நான் தழுவினேன் "மரணம்"

மாலை அவள் கழுத்தில் விழுந்தது "மணமாலையாக"
மாலை என் கழுத்திலும் விழுந்தது "பிணமாலையாக"

அவள் கால்களில் மெட்டி, போகிறாள் "மணமகள் ஊர்வலமாக"
என் கால்களை கட்டி, போகிறேன் நானும் "பிண ஊர்வலமாக"

மணம் முடிந்து, முதல் இரவில் என்னவள் பருகினால் "பால்"
மரணம் முடிந்து, முதல் இரவு கழிந்ததால் நானும் பருகினேன் "பால்"

ஆஹா..!

இருக்கும் பொழுது "இல்லாத பொருத்தம்"
இறந்த பின்தான் "எவ்வளவு பொருத்தம்"..!

விழிகளின் ஒளி



விண்ணில் உள்ள விண்மீன்களை எல்லாம்
ஒன்று திரட்டி ஒளிர செய்தால் கூட...
என்னவளின் இரு விழிகளின்,
ஒளிர்வுக்கு ஈடாகுமா..?

Tuesday, October 20, 2009

என் குறள்


நீரின்றி யமையா இவ்வுலகம்...
நீ இன்றி யமையா என்னுலகம்....

Monday, October 19, 2009

வண்ணத்து பூச்சி



செந்நிற ஆடையில்,
நான் கண்டேன் அந்த வண்ணத்து பூச்சியை...

வெண்ணிற ஆடை கொண்டு,
மணக்கோலம் பூண்ட எண்ணினேன்...

காவி நிற ஆடைதான்
உனக்கு சரியானது என்று,
அது கூறி விட்டு பறந்து சென்றது...!

Thursday, October 15, 2009

மகிழ்ச்சி....




உன்னில் நான்
இருக்கிறேனோ இல்லையோ?
அறியாமல்..
மகிழ்ச்சியுற்றது என் மனம்.
காரணம்..!
நீ என்னை
காணும் பொழுது
உன் விழிக்குள்
நான் இருப்பதாலோ ..?

மின்னல் ஒளி இழந்தது...



மின்னலை பார்த்தால்
கண்கள்
ஒளி இழக்கும் என்பார்கள்..
ஆனால்....
அந்த மின்னலும்
ஒளி இழந்தது,
உன்
கண்ணை பார்த்து....

மூன்றாம் பிறை...



முழு நிலவை விட,
மூன்றாம் பிறையை
மிக அதிகமாக நேசிக்கிறேன்...

காரணம்..?

முழு நிலவாக,
உன் முகம்...

மூன்றாம் பிறையாக,
உன் விழிகள் மட்டும்...

என்ன தவம் செய்ய வேண்டும்....?



சுதந்திர பறவையாய்
பறந்து சென்ற என்னை...
உன் விழி ஈர்ப்பு விசைகுள்ளாக்கி,
என் இதய சிறகுகளை ஒடிய செய்து விட்டாய்...!

என்னவென்று சொல்வது...
உன் விழிகளின் வியப்பை...!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை,
என்னால் இயன்ற வரை ......

கயல்களும் உன் விழிகளின் வியப்பை கண்டு
வெட்கி தலை கவிழுமோ...!

என்ன தவம் செய்ய வேண்டும்...?
முத்தை பாதுகாக்கும்
சிப்பியை போல்.....
உன் விழிகளை பாதுகாக்கும்
இமையாக நான் மாற.......?

விழியில்விழுந்தவன்


இன்று முதல்
உங்கள் விழிகளில்.....